லெங்புய் விமான நிலையம்
லெங்புய் விமான நிலையம் (ஐஏடிஏ: AJL, ஐசிஏஓ: VELP) இந்திய மாநிலமான மிசோரத்தின் அய்சால் நகரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து கொல்கத்தா, குவகாத்தி, இம்பால் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள மூன்று டேபிள் டாப் ஓடுபாதையைக் கொண்ட விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மற்றவை கோழிக்கோடு மற்றும் மங்களூர். இது விமானியிடமிருந்து மிகவும் துல்லியமான அணுகுமுறை தேவைப்படுகிறது.
அய்சால் விமான நிலையம் Lengpui Airport Aizawl Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | இந்திய அரசு | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம், இந்திய அரசு | ||||||||||
சேவை புரிவது | அய்சால் | ||||||||||
அமைவிடம் | அய்சால், மிசோரம், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 1,328.4 ft / 405 m | ||||||||||
ஆள்கூறுகள் | 23°50′18.39″N 092°37′13.29″E / 23.8384417°N 92.6203583°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
இந்த விமான நிலையம் 97.92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.[1] இது இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் டிசம்பர் 1995ம் ஆண்டு ஆரம்பிக்கபட்டு பிப்ரவரி 1998ம் ஆண்டு முடிக்கபட்டது. இதை கட்டுமுன் 130 கி.மீ (81 மைல்) தொலைவில் உள்ள பைரபி ரயில் நிலையமும், 205 கி.மீ (127 மைல்) தூரத்தில் உள்ள சில்சார் விமான நிலையம் மட்டுமே போக்குவரதுக்கு உகந்தது. இந்த விமான நிலையத்தில் 300 பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு வசதியுள்ளது. முன்பு ஏர் டெக்கான், கிங்பிஷர் நிறுவனமும் லெங்க்புயில் தன் சேவையை ஆரம்பித்தன, ஏப்ரல் 2012 க்கு பின் தன் சேவையை நிறுத்தி கொண்டன. [2]
தொழில் நுட்ப விவரங்கள்
தொகுமலைபாங்கான இடத்தில் 2500 மீட்டர் விமான ஓடு தளத்திற்கு அடியில் நீரோடைகள் இருப்பது லெங்க்புய் விமான நிலையத்தின் தனித்துவம்.
வானூர்திகள்
தொகுவிமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஏர் இந்தியா | இம்பால், கொல்கத்தா |
ஜெட் ஏர்வேஸ் | கவுகாத்தி, கொல்கத்தா |
சான்றுகள்
தொகு- ↑ "Advani inaugurates Lengpui airport". NENA NEWS. Dec 22-Jan 6 , 1999 இம் மூலத்தில் இருந்து 6 பிப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120206233613/http://www.nenanews.com/OT%20Dec22-Jan6,99/oh13.htm. பார்த்த நாள்: 14 August 2012.
- ↑ "LENGPUI AIRPORT". Mizoram PWD. Archived from the original on 27 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 14 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
இணைப்புகள்
தொகு- லெங்புய் வானூர்தி நிலையம்Lengpui Airport at the AAI
- உலக ஏரோ தரவுத்தளத்தில் VELP குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.