பொது வழக்கில் சூரிய ஒளி பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் காலப்பகுதி அவ்விடத்தில் பகல் (daylight) எனலாம். கிழக்குத் திசையில் சூரியன் உதிக்கின்ற நேரம் முதல் மேற்கில் மறையும் நேரம் வரையான காலப்பகுதியே இது. ஒரு பகலும், ஓர் இரவும் சேர்ந்தது ஒரு நாள். பகல் நேரம் எப்பொழுதும் ஒரே அளவாக இருப்பதில்லை. ஓர் ஆண்டின் வெவ்வேறு காலங்களில் பகல் நேரத்தின் அளவு வெவ்வேறாக இருக்கின்றது. அத்துடன் புவி மையக் கோட்டுக்குத் தொலைவிலுள்ள இடங்களில் இவ்வேறுபாடு அதிகமாக இருக்கும்.

புவியின் ஆசியப் பகுதியில் பகலும் மற்றொரு பகுதியில் இரவும் உள்ளதை விளக்கும் காட்சி

பூமி தன்னுடைய அச்சில் தன்னைத் தானே சுற்றுவதனாலேயே பகலும் இரவும் உருவாகின்றன. பூமியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அரைப் பகுதி சூரியனை நோக்கியிருக்க, மற்றப்பகுதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கும். சூரியனை நோக்கியிருக்கும் பகுதியில் சூரிய ஒளி விழுவதனால் அப்பகுதி பகலாக இருக்கும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. McAdam, Marcus (14 November 2019). "The Rule of Twelfths". Mc2Photography.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-11. The same Rule of Twelfths can be applied to the duration of the days.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகல்&oldid=4100284" இலிருந்து மீள்விக்கப்பட்டது