இடி
இடி (ⓘ) (Thunder) என்பது காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் வானத்தில் மின்சாரம் உண்டாகிப் பூமியில் பாயும்போது உண்டாகிறது. இடி, மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடியொலி கேட்கும். ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 300000 கிலோமீட்டர்; ஒலியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டும் என்பதே இதன் காரணம் ஆகும்.[1][2][3]
காரணம்
[தொகு]இடி உண்டாக அறிவியல் பூர்வமான காரணங்கள் பலவாறாக உள்ளன. அவற்றுள் கி.மு. நான்காம் நூற்றாண்டில் கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாடில் முதல்முறையாக ஓர் கருதுகோளை முன்வைத்தார்.
இடி எப்படி உருவாகிறது?
[தொகு]மின்னல் புவியை தாக்கும் முன்னர் மேகத்திற்கும் புவிக்கும் இடையில் உள்ள காற்று நிரப்பப்பட்ட பகுதியில் சில வினாடிகள் பயணிக்கும் போது அதிக வெப்பநிலையில் உள்ள மின்னலின் கீற்று அதனை சுற்றி உள்ள காற்றின் மூலக்கூறுகளை வெப்பமாக்கும்.
இவ்வாறு வெப்பமான காற்று விரிவடையும் போது ஏற்படும் சத்தமே ‘இடி’ என்று அழைகப்படுகிறது.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Severe Weather 101: Lightning Basics". nssl.noaa.gov. பார்க்கப்பட்ட நாள் October 23, 2019.
- ↑ "Thunder Facts". factsjustforkids.com. பார்க்கப்பட்ட நாள் October 23, 2019.
- ↑ "The Sound of Thunder". weather.gov. பார்க்கப்பட்ட நாள் October 23, 2019.