உள்ளடக்கத்துக்குச் செல்

இல்மனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இல்மனைட்
இல்மனைட் 4.5 x 4.3 x 1.5 cm
பொதுவானாவை
வகைஆக்சைடு தனிமம்
வேதி வாய்பாடுஇரும்பு டைட்டானியம் , FeTiO
3
இனங்காணல்
நிறம்கறுப்பு அல்லது சாம்பல் நிறம்.
படிக இயல்புதுகள்களாகவும் பாறைகளாகவும் இருக்கும்.
படிக அமைப்புTrigonal Rhombohedral 3
இரட்டைப் படிகமுறல்{0001} simple, {1011} lamellar
பிளப்புabsent; parting on {0001} and {1011}
முறிவுConchoidal to subconchoidal
விகுவுத் தன்மைஉடையக் கூடியது.
மோவின் அளவுகோல் வலிமை5–6
மிளிர்வுMetallic to submetallic
கீற்றுவண்ணம்Black
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகவிடாது
ஒப்படர்த்தி4.70–4.79
ஒளியியல் பண்புகள்Uniaxial (–)
இரட்டை ஒளிவிலகல்Strong; O = pinkish brown, E = dark brown (bireflectance)
பிற சிறப்பியல்புகள்பலவீனமான காந்தப்புலம்
Crystal structure of ilmenite

இல்மனைட் எனும் கரிய நிற கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் வெள்ளை நிற நிறமியின் மிக முக்கிய தாதுப்பொருள். ரஷியாவின் “இல்மன்’ மலை மற்றும் ஏரிப் பகுதிகளில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தக் கனிமத்திற்கு “இல்மனைட்’ என்று பெயரிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் கிடைக்கும் இல்மனைட் கருமணலில் 55 சதவிகிதம் டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது. “ரூட்டைல்’ எனும் கனிமத்தில் 92 சதவிகிதம் முதல் 96 சதவிகிதம் வரை டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாகிய பாறைகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வெப்பத்தில் விரிந்தும் குளிரில் சுருங்கியும் சிறிது சிறிதாகச் சிதைவுறத் தொடங்குகின்றன. இந்தச் சிதைவுறுதலின்போது பாறைகளில் உள்ள கனிமங்கள் உதிர்கின்றன. இவ்வாறு உதிர்ந்த கனிமத்துகள்கள் மழைநீரால் அரிக்கப்பட்டு சிற்றோடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரப்படும் இக் கனிமங்கள் ஓரளவிற்கு ஆற்றங்கரைகளிலும் ஆற்றுப்படுகைகளிலும் வண்டல்களாகப் படிகின்றன. கணிசமான அளவு கனிமங்கள் கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடிப்பகுதியில் பல மீட்டர்கள் கனத்திற்குப் படிவங்களாகப் படிந்து போகின்றன. கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடியில் படிந்த இப் படிவங்களில் உள்ள இல்மனைட், ரூட்டைல் போன்றவை அவைகளுடன் சேர்ந்து படிந்துள்ள குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் போன்ற கனிமங்களை விட அடர்த்தி அதிகமானவை. எனவே இவை அடர் கனிமங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. கரையோரமுள்ள கடலின் கீழ் படிந்த மணலும், கடற்கரையோரமுள்ள மணலும் அலைகளில் சிக்கி முன்னும் பின்னும் அலைக்கழிக்கப்படும்போது அடர்த்தி மிகுந்த இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்ற கனிமங்கள் கரையோரம் படிந்து அளவில் மிகுகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடைபெறுவதால் பல லட்சக்கணக்கான டன்கள் அளவிற்கு இக் கனிமங்கள் சேர்ந்து விடுகின்றன.

நுகர்வு

[தொகு]

பெரும்பாலான இல்மனைட் டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி செய்ய பயன்படுகிறது. இறுதியாக தயாரிக்கப்படும் டைட்டானியம் டை ஆக்சைடு ஒரு பிரகாசமான வெள்ளை தூள்ளாக பெறப்படுகிறது. இது பெயின்ட், காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கில் ஒரு அடிப்படை நிறமியாக பயன்படுத்தப்படுகிறது.

உற்பத்தி

[தொகு]
2005 ல் இல்மனைட் உற்பத்தி

ஆஸ்திரேலியா இல்மனைட் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகில் முதலிடத்தில் உள்ளது. இது 2005-2006 ல் 1.1 மில்லியன் டன்கள் இல்மனைட்டை உற்பத்தி செய்தது. அதனை தொடர்ந்து தென் ஆப்ரிக்கா (952Kt), கனடா (809Kt), சீனா (~ 400Kt) மற்றும் நார்வே (380Kt) உற்பத்தி செய்கின்றன.

Estimated titanium ore production
in thousands of tons for 2005
according to U.S. Geological Survey[1]
நாடு உற்பத்தி
ஆஸ்திரேலியா 1,140
தென் ஆப்ரிக்கா 952
கனடா 809
சீனா 400
நார்வே 380
அமெரிக்கா 300
உக்ரைன் 220
இந்தியா 200
பிரேசில் 130
வியட்னாம் 100
மொசாம்பி (750)
மடகாஸ்கர் (700)
செனகல் (150)
இதர நாடுகள் 120
மொத்த உற்பத்தி 4,800

மேற்கோள்கள்

[தொகு]
  1. "U.S. Geological Survey" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2006-03-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்மனைட்டு&oldid=2916856" இலிருந்து மீள்விக்கப்பட்டது