உடல் சிலிர்ப்பு
உடல் சிலிர்ப்பு அல்லது நடுக்கம் என்பது தோலில் தானாக ஏற்படும் அசைவைக் குறிக்கிறது. உடல் வெப்பநிலை ஒரே சீராக இருக்க வேண்டி குளிா்காலத்தில் மனிதர் உடலே வெப்பத்தை உற்பத்தி செய்யும் (THERMOGENESIS) தன்மை பெற்றதாக உள்ளது. இது உடல் தசைகள் சுருங்கி விரிவடைந்து அதன்வழியாக வெப்பத்தை உருவாகிக்கொள்கிறது. இவ்வாறு உருவாக்கப்படும் வெப்பம் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்கத் தேவையானதாக இருக்கிறது. மனித தோலில் உள்ள ரோமக் கால்கள் அரக்ட்டாா் தசைகள் மூலம் இழுத்துக் கட்டப்பட்டுள்ளன. இந்தத் தசைகள் சுருங்குவதால் ரோமக் கால்கள் குத்திட்டு நிற்கின்றன. இதைத்தான் சிலிா்ப்பு என்கிறோம்.[1][2][3]
அட்ரினலின் என்ற ஹார்மோன் காரணமாகவும் உடலில் சிலிா்ப்பு ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் - பய உணா்ச்சி, திடீா்த் தாக்குதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றிக்கு அவசியமாகிறது. அட்ரினலின் இரத்தத்தில் அதிக அளவில் இருந்தாலும் சிலிா்ப்பு ஏற்படும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் tremor
- ↑ Chen, Wei; Hopfner, Franziska; Becktepe, Jos Steffen; Günther Deuschl (2017-06-16). "Rest tremor revisited: Parkinson's disease and other disorders" (in En). Translational Neurodegeneration 6 (1): 16. doi:10.1186/s40035-017-0086-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:2047-9158. பப்மெட்:28638597.
- ↑ Allan H. Goroll; Albert G. Mulley (1 January 2009). Primary care medicine: office evaluation and management of the adult patient. Lippincott Williams & Wilkins. p. 1178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7817-7513-7. பார்க்கப்பட்ட நாள் 30 May 2011.
- ↑ அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?