கிளாசுதாலைட்டு
Appearance
கிளாசுதாலைட்டு Clausthalite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | செலீனைடு கனிமம் |
வேதி வாய்பாடு | PbSe |
இனங்காணல் | |
நிறம் | நீலச்சாம்பல் நிறம் முதல் ஈயச் சாம்பல் நிறம் |
படிக இயல்பு | திண்ணிய மணிகளுடன் நிறைவடிவ படிகங்கள் |
படிக அமைப்பு | சம அளவை - அறு எண்முகம் (4/m 3 2/m) |
பிளப்பு | {001} முழுமை, {010} முழுமை, {100} முழுமை |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | சாம்பல்கருப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 7.6 - 8.8 |
மேற்கோள்கள் | [1][2][3] |
கிளாசுதாலைட்டு (Clausthalite) என்பது PbSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். ஈயசெலீனைடு கனிமமான இது கலீனா (PbS) கனிமத்துடன் சேர்ந்து திண்மக்கரைசலாக உருவாகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் கிளாசுதாலைட்டு கனிமத்தை Cth[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
தோற்றம்
[தொகு]பிற செலீனைடுகள் மற்றும் பாதரச படிவுகளுடன் குறைவு கந்தக வெப்பநீர் படிவுகளில் கிளாசுதாலைட்டு தோன்றுகிறது. டைமானைட்டு, கிளாக்மானைட்டு, பெர்சிலியனைட்டு, உமாங்கைட்டு, தங்கம், சிடைபியோபலேடினைட்டு மற்றும் யுரேனினைட்டு ஆகிய கனிமங்களுடன் இணைந்து கிளாசுதாலைட்டு காணப்படுகிறது [1].
முதன்முதலில் 1832 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இக்கனிமம் செருமனியில் [3] உள்ள ஆர்சு மலையில் கிளாசுதால் – செல்லர்பெல்டு பகுதியில் கிடைக்கப்பெற்றதால் கிளாசுதாலைட்டு என்ற பெயர் பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 http://rruff.geo.arizona.edu/doclib/hom/clausthalite.pdf Handbook of Mineralogy
- ↑ http://webmineral.com/data/Clausthalite.shtml Webmineral data
- ↑ 3.0 3.1 http://www.mindat.org/min-1061.html Mindat
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.