சம்புபுரத்தின் இந்திராணி
சம்புபுரத்தின் இந்திராணி Indrani of Sambhupura សំបួរបុរៈ វ្រះបាទ | |
---|---|
ஈசானபுர மகாராணியார் | |
ஆட்சி | ?? |
முன்னிருந்தவர் | தெரியவில்லை |
பின்வந்தவர் | இளவரசி நாத பாத தேவி Princess Nate Patin Tevy ព្រះនាងន្ឫបតីន្ទ្រទេវីទី២ |
மரபு | ஈசானபுரம் கவுந்தினியம் |
அரச குலம் | சோம் வோங் |
பிறப்பு | சம்புபுரம் |
இறப்பு | சம்புபுரம் |
இந்திராணி (ஆங்கிலம்: Indrani) (8-ஆம் நூற்றாண்டு), கம்போடியாவின் ஈசானபுரம் (Isanapura) என்று அழைக்கப்படும் சம்புபுரத்தை (Sambhupura Chenla) ஆட்சி செய்த சென்லா இராணி ஆவார். சென்லா இராச்சியம் தற்போது கம்போடியாவில் ஒரு பகுதியாக உள்ளது.[1]
வரலாறு
[தொகு]இந்திராணி, கம்போடியாவின் சம்புபுர அரசாட்சியின் வாரிசு ஆவார். இவர் இராணி செயதேவியின் (Jayadevi) வாரிசும் மகனுமான புஷ்கரசன் (Pushkaraksha) என்பவர் மணந்தார். இந்திரலோகன் (Indraloka) என்றும் புஷ்கரன் அழைக்கப் படுகிறார்.
இவர்கள் திருமணம் செய்துகொண்டபோது புஷ்கரனின் மனைவி இந்திராணி சம்புபுரத்தின் இணை ஆட்சியாளராக ஆனார். ஆனாலும் இந்திராணி தன் சொந்த உரிமையால் ஓர் இராணியாக இருந்தார் என்பது தெளிவாகிறது.
முதலாம் நரேந்திரதேவி
[தொகு]இந்திராணிக்கு சம்புவர்மன் (Sambhuvarman) (உருத்திரவர்மன்) என்ற ஒரு மகனும், நிருபதேந்திரதேவி (Nipatendradevi) என்ற ஒரு மகளும் இருந்தனர். இந்திராணியின் மகன் சென்லாவின் இளவரசியும், தன் தந்தையின் சகோதரியான முதலாம் நரேந்திரதேவியின் (Narendradevi I) மகளுமான இரண்டாம் நரேந்திரதேவியை (Narendradevi (II) மணந்தான்.[2]
இராணி இந்திராணியின் மரணத்திற்குப் பிறகு பல நூற்றாண்டுகளாக தன் சொந்த உரிமையில் ஓர் ஆட்சியாளராகவும் அரசியாகவும் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
மூன்றாம் செயவர்மன் (Jayavarman III) ஆட்சியின் போது அமைக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, 'விரா கம்ரதன் அன் இந்திராணியின் நிலம்' (The Land of Vrah Kamraten An Indrani) என்று குறிப்பிடுகிறது. [3]
இந்திரலோக இராணி இந்திராணி
[தொகு]இராணி இந்திராணியின் பேரன் முதலாம் இந்திரவர்மன் (Indravarman I) (ஆட்சி 877-889 881-இல் பகோங் நினைவிடத்தில் (Bakong Monument) 'இந்திரலோக இராணி இந்திராணி' (Queen of Indraloka, Indrani) என்ற சிலையை நிறுவினான். [4]
சான்றுகள்
[தொகு]- ↑ Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008
- ↑ Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008
- ↑ Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008
- ↑ Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008