உள்ளடக்கத்துக்குச் செல்

நாற்றுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசுமைக்குடிலில் நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன.

நாற்றுகள் (Liners) என்னும் சொல் இளம் தாவரங்களைக் குறிக்கும் சொல்லாகும். பெரும்பாலும் தோட்டக்கலையில் இது குழித்தட்டுகளில் வளர்க்கப்படும் இளம் தாவரவகைகளைக் குறிக்கிறது. இந்த நாற்றுகள் பெரும்பாலும் மொத்த வணிகர்களுக்காகு விற்பனைக்காக வளர்க்கப்படுகின்றன. பின்னர் இவை மொத்த வணிகர்களால் மேலும் பெரியதாக வளர்க்கப்பட்டு பின்னர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதும் உண்டு. நாற்றுகள் பெரும்பாலும் விதைகளை முளைக்கவைத்து உருவாக்கப்படுகின்றன. ஆனால் தாவர தண்டு பகுதிகளைக் கொண்டு பதியம் போடுதல், திசு வளர்ப்பு மூலமாகவும் வளா்க்கப்படுவதும் உண்டு. நெகிழிகளாலான குழித்தட்டுகளில் உள்ள ஒவ்வொரு சிற்றறைகளிலும் ஒரு நாற்று என தனித்தனியாக வளா்க்கப்படுகின்றன. நாற்றுகள் பொதுவாக 36 சிற்றை குழித்தட்டுகளில் இருந்து 288 சிற்றறை குழித்தட்டுகள் வரை இருக்கும். வணிக ரீதியிலான நாற்றுப் பண்ணைகளில் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான அளவு 50 மற்றும் 72 சிற்றறைகள் கொண்ட குழிதட்டுகள் ஆகும். தோட்டக்கலையில் பொதுவாக "நாற்று" என்ற சொல் பொதுவாக பல்லாண்டுவாழ்கிற, அலங்கார, மரக் கன்றுகளுக்கான நாற்றுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதே வடிவத்தில் ஆனால் பெரியதாக உள்ள கொள்கலனில் ஆண்டுக்கணக்கில் செடிகளை வளர்த்து பலன்களை ஈட்ட பயன்படுத்தப்படும் கொள்கலன்களை பிளக்குகள் என குறிப்பிடப்படுவர்.[1][2][3][4]

சான்றுகள்

[தொகு]
  1. "Definition of liner plants".
  2. "Definition of liner plants".
  3. "Final Agency Determination: FAD-70". Archived from the original on 2017-05-06. பார்க்கப்பட்ட நாள் 2007-04-03.
  4. Directives egov.usda.gov

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்றுகள்&oldid=4100064" இலிருந்து மீள்விக்கப்பட்டது