உள்ளடக்கத்துக்குச் செல்

பலெர்மோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலெர்மோ (Palermo, சிசிலிய மொழி: Palermu, இலத்தீன்: Panormus, கிரேக்க மொழி: Πάνορμος, Panormos) தெற்கு இத்தாலியிலுள்ள, தன்னாட்சிப் பகுதியான சிசிலி மற்றும் பலெர்மோ பெருநகரப் பகுதி ஆகிய இரண்டிற்கும் தலைநகரம் ஆகும். இந்த நகரம் இதன் வரலாறு, பண்பாடு, கட்டிடக்கலை, உணவியலுக்காக பெரிதும் அறியப்படுகின்றது. தனது 2,700 ஆண்டு தொன்மையான வரலாற்றின் பெரும்பகுதியும் இவற்றில் முதன்மையான பங்களித்துள்ளது. பலெர்மோ திர்ரேனியக் கடலின் பலெர்மோ வளைகுடாவை அடுத்து சிசிலித் தீவின் வடமேற்கே அமைந்துள்ளது.

கி.மு 734இல் போனீசியர்கள் இந்த நகரை நிர்மாணித்தனர்; சிஸ் ('பூ') எனப் பெயரிட்டிருந்தனர். பின்னர் பலெர்மோ கார்த்திஜ் ஆளுமையிலும் தொடர்ந்து உரோமைக் குடியரசின் அங்கமாயிற்று. பின்னர் பைசாந்தியப் பேரரசின் அங்கமாக ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது. கிரேக்கர்கள் இந்த நகருக்கு முழுமையான துறைமுகம் எனப் பொருள்பட பனோர்மசு என்று பெயரிட்டனர். 831 முதலிலிருந்து 1072 வரை இந்நகரம் அராபிய ஆட்சியில் இருந்தது; சிசிலி எமிரேட்டின் தலைநகரமானது. அரபாபியர் இதற்கு கிரேக்கப் பெயரை மாற்றி பா அல் ஹார்ம் (அரபு மொழி: بَلَرْم‎) [1][2] எனப் பெயரிட்டது. இதுவே பின்னாளில் இந்நகரின் தற்போதைய பெயருக்கு வேராயிற்று. நார்மன் மீள்வெற்றிக்குப் பின்னர் சிசிலி இராச்சியம் (1130 முதல் 1816 வரை) என்ற புதிய இராச்சியத்தின் தலைநகராயிற்று. பேரரசர் பிரெடிரிக் II காலத்திலும் கான்ராடு IV காலத்திலும் புனித உரோமைப் பேரரசின் தலைநகரமாகவும் விளங்கியது.

பலெர்மோ நகரியப் பகுதியின் மக்கள்தொகை 855,285 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. 1.2 மில்லியன் மக்களுள்ள இதன் பெருநகரப் பகுதி இத்தாலியின் ஐந்தாவது மிகுந்த மக்கள்தொகையுள்ள பெருநகரப் பகுதியாக உள்ளது. மையப்பகுதியின் மக்கள்தொகை 676,000 ஆகும். இத்தாலிய மொழியும் சிசிலிய மொழியின் பலெர்மோதானிய வழக்குமொழியும் இங்கு பேசப்படும் மொழிகளாகும்.

பலெர்மோ சிசிலியின் பண்பாட்டு, பொருளியல் மற்றும் சுற்றுலாத் தலைநகரம். இது வரலாறு, பண்பாடு, கலை, இசை, உணவு துறைகளில் தனது முத்திரையைப் பதித்துள்ளது. Numerous tourists are attracted to the city for இங்குள்ள இதமான நடுநிலக்கடல் வானிலை, இதன் அறுசுவை உணவு, உணவகங்களுக்காகவும் ரோமனெஸ்க், கோதிக், பரோக் தேவாலயங்கள், அரண்மனைகள் மற்றும் கட்டிடங்கள், மற்றும் இரவுக் கேளிக்கைகள், இசை போன்றவற்றிற்காகவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.[3] பலெர்மோ சிசிலியின் முதன்மையான தொழில், வணிக மையமாகும்: முதன்மைத் தொழில்களாக சுற்றுலா, சேவைகள், வணிகம், வேளாண்மை உள்ளன.[4] இங்கு பால்கோன்-போர்செல்லினோ பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.

பண்பாட்டு,கலைநய,பொருளியல் காரணங்களுக்காக நடுநிலக் கடலில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக பலெர்மோ விளங்கியது. இத்தாலியிலும் ஐரோப்பாவிலும் மிகுந்த சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக பலெர்மோ உள்ளது. இது அரபு-நோர்மன் பலெர்மோவும் பேராலயங்களும் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் கவனமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றது. ஐரோ-நடுநிலக்கடல் பகுதியில் உள்ள பெருநகரங்களில் ஒன்றாக தயாராகி வருகின்றது.[5]

உரோமைக் கத்தோலிக்கம் பலெர்மோதானியப் பண்பாட்டில் முதன்மை வகிக்கிறது. பலெர்மோவின் காவல் துறவி சான்டா ரோசல்லா ஆகும். அவரது விருந்து நாள் சூலை 15 அன்று கொண்டாடப்படுகின்றது. அந்நாளில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வண்ணம் பழம், காய்கள், மீன் சந்தைகள் களை கட்டுகின்றன.[6]

மான்டே பெல்லெக்ரினோவிலிருந்து பலெர்மோவின் காட்சி

ஒளிப்படத் தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Trabia, Carlo. "Discovering the Kalsa". Best of Sicily. பார்க்கப்பட்ட நாள் December 26, 2017.
  2. Mendola, L. "Sicilian Peoples: The Arabs". The Muslim Times. பார்க்கப்பட்ட நாள் December 26, 2017.
  3. "Travel: Palermo, Sicily". Sicilian Culture. 2002-03-09. Archived from the original on 2010-11-28. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
  4. "Sicily". europa.eu. பார்க்கப்பட்ட நாள் 2017-08-01.
  5. php Capital dell'euromediterraneo for redevelopment, development and promotion of the metropolitan area of Palermo[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Pergament, Danielle (8 January 2008). "In Palermo, Life Vibrates in a Fading Market". NYTimes.com. http://travel.nytimes.com/2007/05/20/travel/20journeys.html. பார்த்த நாள்: 21 May 2010. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலெர்மோ&oldid=3587470" இலிருந்து மீள்விக்கப்பட்டது