பெயர்
பெயர் (Name) என்பது ஓர் உயிரியையோ உயிரற்ற பொருளையோ அடையாளப்படுத்துவதற்காக உபயோகப்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஒருவரையோ ஒரு குழுமத்தையோ இந்தப் பெயர் அடையாளப்படுத்தும்.
முக்கியத்துவமும் சிறப்பும்
ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளப் பெயர் அவசியமாகிறது. தம்முடைய மொழி, இனம், மதம், சார்ந்திருக்கும் மக்கள், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்து தங்களுடைய மகன் அல்லது மகளுக்குப் பெயர் வைக்கின்றனர். பண்டைய காலம் தொட்டு, தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு, பெயர் வைக்கும் நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
சில எடுத்துக்காட்டுகள்
- ஈ. வெ. ராமசாமி-ஈரோடு மாவட்டம், வெங்கட்ட நாயக்கர் மகன் ராமசாமி என்பது பெரியார் என்று மக்களால் அழைக்கப்பட்டவருக்கு அவர்களுடைய பெற்றோர் வைத்த பெயர்.[1]
- திரு. வி. கலியாணசுந்தரனார்-காஞ்சிபுரம் மாவட்டம் விருத்தாசல முதலியார் மகன் என்பவர் மக்களால் திரு. வி. க. என்று அழைக்கப்பட்டார்.
குலப் பெயர்கள்
தமிழகத்தில் பெயர்களுக்கு பின்னால் குல பெயர்.
எ.கா. மேல் குறிப்பிட்ட இருவரும் தம்முடைய பெயரில் குலத்தைச் சேர்க்கவில்லை. ஆயினும் அவர்களுடைய தந்தை பெயர்களில் குலப் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பெயரில் பட்டங்களும் பதவிகளும்
ஒருவருடைய பட்டமும் பதவியும் அவர்களுடைய பெயரிலும் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. முனைவர், மருத்துவர், பொறியியலாளர் என அனைத்துத் துறையினரும் தம்முடைய பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் பட்டத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். இப்பழக்கம் சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது.
(எ-டு)
குடும்பப் பெயர்கள்
வட மாநிலங்களிலும், வேறு சில நாடுகளிலும் பெரும்பாலும் தம்முடைய குடும்பத்திற்கு என்று சில பெயர்கள் இருக்கின்றன.
(எ-டு)
கடவுள் பெயர்கள்
பெரும்பாலும் கடவுளின் பெயர்கள் மனிதர்களுக்கு சூட்டப்படுகிறது.
(எ-டு)
- இந்துக் கடவுளின் பெயர் : இராமன்
பெண்களின் பெயர்
பெண்கள் திருமணத்திற்குப் பிறகு, தங்களுடைய பெயரை மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. பொதுவாக தம்முடைய பெயரின் முதல் எழுத்தை (Initial) மாற்றம் செய்து கொள்வர்.
(எ-டு)
திருமணத்திற்கு முன்: இந்திரா பிரியதர்சினி
பெரோஸ் காந்தியை மணந்த பின்: இந்திரா பிரியதர்சினி காந்தி
வெளி இணைப்புகள்
- பெயரிடல் (ஆங்கில மொழியில்)
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "கீற்று தளத்தில் தமிழர் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 17, 2012.