பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் | |
---|---|
நிக் கார்டெர், ஹவ்வி தொரொவ், ப்ரைன் லிட்ரெல் மற்றும் ஏஜெ மெக்லீன் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | ஆர்லண்டோ - புளோரிடா - ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
இசை வடிவங்கள் | பாப் இசை |
இசைத்துறையில் | 1993 – இன்றுவரை |
உறுப்பினர்கள் | நிக் கார்டெர், ஹவ்வி தொரொவ், ப்ரைன் லிட்ரெல், ஏஜெ மெக்லீன் கெவின் ரிச்சர்ட்ஸன் |
பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் (BackStreet Boys, பின்தெரு பசங்க) பிரபல அமெரிக்க பாப் இசைக்குழுவாகும். இது 90களின் மத்தியிலும் 2000 ஆண்டின் ஆரம்பகாலத்திலும் மிகப்பிரபலமாக இருந்த இசைக்குழுவாகும். இந்த இசைக்குழு சிறந்த இசைக்காக வழங்கப்படும் கிராமி விருதிற்காக பலமுறை பரிசீலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இவர்களது இசைத்தட்டுக்கள் 130 கோடி விற்பனையாகி உலகின் முதல் நிலை இளைஞர்கள் இசைக்குழு என்ற பெயர் பெற்றனர்.
இவர்கள் 1993ல் உருவானார்கள். 1995ல் பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ், 1998 பேக்ஸ்ட்ரீட்ஸ் பேக், 2000ல் மில்லினியம், 2002ல் ப்ளேக் அண்ட் ப்ளூ, 2005ல் நெவெர் கோன் ஆகிய ஆல்பங்களை வெளியிட்டனர். பின்பு கெவின் ரிச்சர்ட்சன் இக்குழுவை விட்டு வெளியே சென்றார், பின்பு நாலு பேர் கொண்ட குழுவாக 2007ல் அன்பிரேக்கபுல், 2009ல் திஸ் இஸ் அஸ் போன்ற வெற்றி ஆல்பங்களை வெளியிட்டு உள்ளனர் . 2010ல் நியூ கிட்ஸ் ஆன் தி பிளாக் என்னும் குழுவுடன் சேர்ந்து என்கேஒடிபீஎஸ்பீ என்னும் பெரிய குழுவாக உலகம் முழுவதும் சுற்றி நல்ல வரவேற்பு பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கு முடிவில் கெவின் ரிச்சர்ட்சன் ஏப்ரல் 29ம் தேதி பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ்ல் மறுபடியும் சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆகத்து 31 இல் ஜிஎம்யெ என்னும் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனத்தில் முதல் முறையாக 2006 இற்குப் பின்னர் ஐந்து பேராகப் பாடினார்கள்.
2012 நவம்பர் 6 ம் தேதி இட்ஸ் கிறிஸ்துமஸ் டைம் எகெயின் என்னும் பாடல் வெளியிட்டனர்.