மரக்காணம்
மரக்காணம் | |
ஆள்கூறு | 12°12′N 79°57′E / 12.2°N 79.95°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
வட்டம் | மரக்காணம் வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
22,034 (2011[update]) • 594/km2 (1,538/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
37.12 சதுர கிலோமீட்டர்கள் (14.33 sq mi) • 14 மீட்டர்கள் (46 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/marakkanam |
மரக்காணம் (ஆங்கிலம்:Marakkanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் வட்டம் மற்றும் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். மரக்காணம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
[தொகு]மாவட்டத் தலைமையிடமான விழுப்புரத்திலிருந்து 80 கிமீ தொலைவில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்த மரக்காணம் பேரூராட்சிக்கு கிழக்கில் வங்காள விரிகுடா, மேற்கில் திண்டிவனம் 40 கிமீ; வடக்கில் சென்னை 123 கிமீ மற்றும் தெற்கில் பாண்டிச்சேரி 38 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]37.12 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 74 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,286 வீடுகளும், 22,034 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 931 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,777 மற்றும் 245 ஆகவுள்ளனர்.[4]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 12°12′N 79°57′E / 12.2°N 79.95°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 14 மீட்டர் (45 அடி) உயரத்தில் இருக்கின்றது. மரக்காணத்தின் தபால் தலை குறியீடு எண்: 604303.
மேலும் பார்க்க
[தொகு]- கர்ணாவூர் மரக்காணம் ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமம்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ மரக்காணம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Marakkanam Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
- ↑ "Marakkanam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)