மும்பை இந்தியன்ஸ்
தனிப்பட்ட தகவல்கள் | ||
---|---|---|
தலைவர் | ஹர்திக் பாண்டியா | |
பயிற்றுநர் | மகேல ஜயவர்தன[1] | |
உரிமையாளர் | ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்[2] | |
அணித் தகவல் | ||
நகரம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா | |
நிறங்கள் | Blue | |
உருவாக்கம் | 24 January 2008 | |
உள்ளக அரங்கம் | வான்கேடே அரங்கம் (கொள்ளளவு: 33,108) | |
Secondary home ground(s) | பிரபோர்ன் அரங்கம் (கொள்ளளவு: 25,000) | |
வரலாறு | ||
இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகள் | 5 (2013, 2015, 2017, 2019),2020) | |
சலீஇ20 வெற்றிகள் | 2 (2012, 2013) | |
அதிகாரபூர்வ இணையதளம்: | www | |
|
மும்பை இந்தியன்ஸ் என்பது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணிகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவின் மும்பை நகரை அடிப்படையாகக் கொண்டது. 2008இல் தொடங்கப்பட்ட இந்த அணி, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. தற்போது அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா உள்ளார். இந்த அணியின் முன்னாள் தலைவராக சச்சின் தெண்டுல்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மிகவும் வெற்றிகரமான அணியாகும். இதுவரை நடைபெற்ற 12 தொடர்களில் 5 முறை பட்டம் வென்றுள்ளது. சாம்பின்ஸ் லீக் இ20ப தொடரில் இருமுறை பட்டம் வென்றுள்ளது.
உரிமைக்குழு வரலாறு
[தொகு]செப்டம்பர் 2007இல், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. அதன் முதல் பருவம் 2008ஆம் ஆண்டில் தொடங்கவிருந்தது. 20 பிப்ரவரி 2008இல் மும்பை உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் மும்பையில் ஏலம் விடப்பட்டன அதில் மும்பை அணியை ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் நிறுவனம் 111.9 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கியது. இதன்மூலம் அந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட அணியாக இருந்தது. முகேஷ் அம்பானி தலைமையிலான அந்நிறுவனம் மும்பை அணியின் உரிமைக்குழுவை 10 ஆண்டுகளுக்கு வாங்கியிருந்தது. பிறகு அந்த அணிக்கு "மும்பை இந்தியன்ஸ்" என்று பெயரிடப்பட்டது.
பருவங்கள்
[தொகு]ஆண்டு | ஐபிஎல் | சாலீஇ20 |
---|---|---|
2008 | குழுநிலை | தகுதிபெறவில்லை |
2009 | குழுநிலை | தகுதிபெறவில்லை |
2010 | இரண்டாமிடம் | குழுநிலை |
2011 | தகுதிச்சுற்று | வாகையாளர் |
2012 | தகுதிச்சுற்று | குழுநிலை |
2013 | வாகையாளர் | வாகையாளர் |
2014 | தகுதிச்சுற்று | தகுதி நிலை |
2015 | வாகையாளர் | தொடர் கைவிடப்பட்டது |
ஆண்டு | ஐபிஎல் | |
2016 | தகுதிச்சுற்று | |
2017 | வாகையாளர் | |
2018 | தகுதிச்சுற்று | |
2019 | வாகையாளர் | |
2020 | வாகையாளர் | |
2021 | தகுதிச்சுற்று |
வீரர்கள் பட்டியல்
[தொகு]- பன்னாட்டு வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண். | பெயர் | நாடு | பிறந்த நாள் | மட்டையாட்ட நடை | பந்துவீச்சு நடை | ஒப்பந்த ஆண்டு | வருமானம் | குறிப்புகள்
|
---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாளர்கள் | ||||||||
28 | அன்மோல்பிரீத் சிங் | 28 மார்ச்சு 1998 | வலது-கை | வலது-கை எதிர் திருப்பம் | 2019 | ₹80 லட்சம் | ||
45 | ரோகித் சர்மா | 30 ஏப்ரல் 1987 | வலது-கை | வலது-கை எதிர் திருப்பம் | 2018 | ₹15 கோடி | தலைவர் | |
77 | சூர்யகுமார் யாதவ் | 14 செப்டம்பர் 1990 | வலது-கை | வலது-கை மிதம் | 2018 | ₹3.2 கோடி | ||
பன்முக வீரர்கள் | ||||||||
6 | அனுகூல் ராய் | 30 நவம்பர் 1998 | இடது-கை | மந்த இடது-கை வழமைச் சுழல் | 2018 | ₹20 லட்சம் | ||
19 | ஜெயந்த் யாதவ் | 22 சனவரி 1990 | வலது-கை | வலது-கை எதிர் திருப்பம் | 2019 | ₹50 லட்சம் | ||
24 | குருணால் பாண்டியா | 24 மார்ச்சு 1991 | இடது-கை | மந்த இடது-கை வழமைச் சுழல் | 2018 | ₹8.8 கோடி | ||
33 | ஹர்திக் பாண்டியா | 11 அக்டோபர் 1993 | வலது-கை | வலது-கை மிதம்-வேகம் | 2018 | ₹11 கோடி | ||
55 | கீரோன் பொல்லார்ட் | 12 மே 1987 | வலது-கை | வலது-கை மிதம்-வேகம் | 2018 | ₹5.4 கோடி | வெளிநாட்டு | |
N/A | ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் | 15 ஆகத்து 1998 | இடது-கை | வலது-கை வேகம்-மிதம் | 2020 | ₹2 கோடி | வெளிநாட்டு | |
இழப்புக் கவனிப்பாளர்கள் | ||||||||
13 | குவின்டன் டி கொக் | 17 திசம்பர் 1992 | இடது-கை | 2019 | ₹2.8 கோடி | வெளிநாட்டு | ||
27 | ஆதித்ய தாரே | 7 நவம்பர் 1987 | வலது-கை | 2018 | ₹20 லட்சம் | |||
51 | இஷான் கிஷான் | 18 சூலை 1998 | இடது-கை | இடது-கை மிதம் | 2018 | ₹6.2 கோடி | ||
பந்து வீச்சாளர்கள் | ||||||||
1 | ராகுல் சாஹர் | 4 ஆகத்து 1999 | வலது-கை | வலது-கை நேர் திருப்பம் | 2018 | ₹1.9 கோடி | ||
81 | மிட்செல் மெக்கலெனகன் | 11 சூன் 1986 | இடது-கை | இடது-கை வேகம்-மிதம் | 2018 | ₹1 கோடி | வெளிநாட்டு | |
93 | ஜஸ்பிரித் பும்ரா | 6 திசம்பர் 1993 | வலது-கை | வலது-கை வேகம்-மிதம் | 2018 | ₹7 கோடி | ||
99 | லசித் மாலிங்க | 27 ஆகத்து 1983 | வலது-கை | வலது-கை வேகம் | 2019 | {₹2 கோடி | வெளிநாட்டு | |
N/A | டிரென்ட் போல்ட் | 22 சூலை 1989 | வலது-கை | இடது-கை வேகம் | 2020 | ₹2.2 கோடி | வெளிநாட்டு | |
N/A | தவால் குல்கர்னி | 10 திசம்பர் 1988 | வலது-கை | வலது-கை மித வேகம் | 2020 | ₹75 லட்சம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mahela Jayawardene to succeed Ricky Ponting as Mumbai Indians coach". The Indian Express. 18 November 2016. http://indianexpress.com/article/sports/cricket/mahela-jayawardene-to-succeed-ricky-ponting-as-mumbai-indians-coach-4382716/.
- ↑ "IPL 2019: Meet the owners of the 8 teams taking the field in season 12". Moneycontrol. https://www.moneycontrol.com/news/trends/sports-trends/ipl-2019-meet-the-owners-of-the-8-teams-taking-the-field-in-season-12-2542331.html. பார்த்த நாள்: 15 August 2019.