மைசூர் மாநிலம்
மைசூர் மாநிலம் | |||||
இந்திய மாநிலம் | |||||
| |||||
சின்னம் | |||||
1951 இல் மைசூர் மாநிலம் | |||||
வரலாறு | |||||
• | மைசூர் இராச்சியம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. | 9 ஆகத்து 1947 | |||
• | கருநாடகம் என பெயர் மாற்றப்பட்டது | 1 நவம்பர் 1973 | |||
தற்காலத்தில் அங்கம் | இந்தியா |
மைசூர் மாநிலம் (Mysore State) என்பது இந்திய ஒன்றியத்தின் ஒரு முன்னாள் மாநிலம் ஆகும். இந்தியக் குடியரசு 1947 இல் உருவான பிறகு மைசூர் இராச்சியத்தின் பிரதேசங்களுக்கு வெளியே உள்ள சில பகுதிகளுடன் சேர்ந்து, 1956 வரை [1] பெங்களூரைத் தலைநகராகக் கொண்டு இந்த மாநிலம் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருந்தது. மொழிவாரியாக கன்னடம் பேசும் ஒரே இன மக்களைக் கொண்ட மாநிலமாக 1956 இல் விரிவடைந்தது. [2] இது பின்னர் கர்நாடக மாநிலம் என பெயர் மாற்றப்பட்டது.
வரலாறு
[தொகு]மைசூர் ராஜ்ஜியம் என்பது பிரித்தானிய இந்திய ஆட்சிக் காலத்தில் இந்திய துணைக் கண்டத்தில் இருந்த மூன்று பெரிய சுதேச அரசுகளில் ஒன்றாகும். 1947 இல் பிரிட்டனிடமிருந்து இந்தியப் பேரரசு சுதந்திரம் பெற்ற பிறகு, மைசூர் மகாராஜா ஜெயச்சாமராஜா உடையார் இந்திய ஒன்றியத்துடன் தனது இராஜ்யத்தை இணைக்கும் ஒப்பந்த்ததில் கையெழுத்திட்டார். மைசூர் இராச்சியத்தின் பிரதேசங்கள் பின்னர் இந்திய ஒன்றியத்துக்குள் ஒரு மாநிலமாக மறுசீரமைக்கப்பட்டது. [3]
1956 ஆம் ஆண்டில், இந்திய அரசு மாநில எல்லைகளை மொழி அடிப்படையில் மறு-சீரமைப்பு செய்தது. 1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் விளைவாக, கன்னடம் பேசும் பெல்காம் ( கோலாப்பூர் வட்டம் தவிர), பிஜப்பூர், தார்வார், வட கன்னட ஆகிய மாவட்டங்கள் பம்பாய் மாநிலத்திலிருந்து பிரித்து மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. [4] ஆந்திர மாநிலத்தில் இருந்து பெல்லாரி மாவட்டம் மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. தென் கனரா மாவட்டம் சென்னை மாநிலத்தில் இருந்தும், கொப்பள், ராய்ச்சூர், குல்பர்கா, பீதார் மாவட்டங்கள் ஐதராபாத் மாநிலத்தில் இருந்தும் பிரித்து மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மேலும், மைசூர் மாநிலத்துடன் சிறிய கூர்க் மாநிலமும் இணைக்கப்பட்டு, மைசூர் மாநிலத்தின் ஒரு மாவட்டமாக ஆக்கப்பட்டது. [5] [6] இந்த மாநிலம் 1973 நவம்பர் முதல் நாள் அன்று கருநாடகம் என்று பெயர் மாற்றபட்டது. [7]
ஆளுநர்கள்
[தொகு]ஆட்சியாளர் | ||
---|---|---|
மைசூர் இராச்சியத்தின் மகாராஜாக்கள் | ||
மைசூர் மகாராஜா | ||
பழைய மைசூர் மாநிலத்தின் ராஜ்பிரமுகர்கள் | ||
15 ஆகத்து 1947 | 1 நவம்பர் 1956 | மகாராஜா ஜெயச்சாமராஜா உடையார் (பி. 1919 - இ. 1974) |
ஒருங்கிணைந்த மைசூர் மாநிலத்தின் ஆளுநர்கள் | ||
1 நவம்பர் 1956 | 4 மே 1964 | மகாராஜா ஜெயச்சாமராஜா உடையார் |
4 மே 1964 | 2 ஏப்ரல் 1965 | சத்யவந்த் மல்லண்ணா ஸ்ரீநாகேஷ் (பி. 1903 - இ. 1977) |
2 ஏப்ரல் 1965 | 13 மே 1967 | வி. வி. கிரி (பி. 1894 - இ. 1980) |
13 மே 1967 | 30 ஆகத்து 1969 | கோபால் சுவரூப் பதக் (பி. 1896 - இ. 1982) |
30 ஆகத்து 1969 | 22 அக்டோபர் 1969 | ஏ. ஆர். சோம்நாத் ஐயர் |
23 அக்டோபர் 1969 | 1 பிப்ரவரி 1972 | தர்ம விரா (பி. 1906 - இ. 2000) |
1 பிப்ரவரி 1972 | 10 சனவரி 1976 | மோகன் லால் சுகாதியா (பி. 1916 - இ. 1982) |
கர்நாடக மாநில ஆளுநர்கள் | ||
கர்நாடக ஆளுநர்கள் |
முதலமைச்சர்கள்
[தொகு]நிர்வாகிகள் | அரசியல் கட்சி | ||
---|---|---|---|
மைசூர் இராச்சியத்தின் திவான்கள் | |||
மைசூர் திவான் | |||
பழைய மைசூர் மாநில முதல்வர்கள் | |||
1946 | 25 அக்டோபர் 1947 | திவான் ஆற்காடு ராமசாமி முதலியார் (பி. 1887 - இ. 1976) | என்.ஏ |
25 அக்டோபர் 1947 | 30 மார்ச் 1952 | கிசாசம்பள்ளி செங்கலராய ரெட்டி (பி. 1902 - இ. 1976) | இதேகா |
30 மார்ச் 1952 | 19 ஆகத்து 1956 | கெங்கல் ஹனுமந்தய்யா (பி. 1908 - இ. 1980) | |
19 ஆகஸ்ட் 1956 | 1 நவம்பர் 1956 | கடிதால் மஞ்சப்பா (பி. 1910 - இ. 1992) | |
ஒருங்கிணைந்த மைசூர் மாநில முதல்வர்கள் | |||
1 நவம்பர் 1956 | 16 மே 1958 | எஸ். நிஜலிங்கப்பா (பி. 1902 - இ. 2000) | இதேகா |
16 மே 1958 | 9 மார்ச் 1962 | பசப்பா தனப்பா ஜாட்டி (பி. 1912 - டி. 2002) | |
9 மார்ச் 1962 | 14 மார்ச் 1964 | குடியரசு தலைவர் ஆட்சி | |
14 மார்ச் 1962 | 21 ஜூன் 1962 | எஸ். ஆர். காந்தி | இதேகா |
21 ஜூன் 1962 | 3 மார்ச் 1967 | எஸ். நிஜலிங்கப்பா | |
3 மார்ச் 1967 | 29 மே 1968 | குடியரசு தலைவர் ஆட்சி | |
29 மே 1968 | 27 மார்ச் 1971 | வீரேந்திர பட்டீல் | இதேகா |
27 மார்ச் 1971 | 20 மார்ச் 1972 | குடியரசு தலைவர் ஆட்சி | |
20 மார்ச் 1972 | 1 நவம்பர் 1973 | தேவராஜ் அர்ஸ் (பி. 1915 - இ. 1982) | இதேகா |
கர்நாடக மாநில முதல்வர்கள் | |||
கர்நாடக முதல்வர் |
இதையும் பார்க்கவும்
[தொகு]குறிப்புகள்
[தொகு]
- ↑ "States of India since 1947". World Statesman. Archived from the original on 1 July 2014. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
- ↑ "Rajyotsava: The hows and whys of Karnataka". Bangalore Mirror.
- ↑ Sadasivan, S. N. (2005). Political and administrative integration of princely states By S. N. Sadasivan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170999683.
- ↑ "States Reorganization Act 1956". Commonwealth Legal Information Institute. Archived from the original on 25 July 2011. பார்க்கப்பட்ட நாள் 1 July 2008.
- ↑ "Google Books". books.google.com.
- ↑ Ramaswamy, Harish (1 June 2007). "Karnataka Government and Politics". Concept Publishing Company – via Google Books.
- ↑ Ninan, Prem Paul (2005-11-01). "History in the making". Deccan Herald. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2020-07-31.