லித்துவேனியாவின் தேசியக்கொடி
பயன்பாட்டு முறை | தேசியக் கொடி and civil ensign |
---|---|
அளவு | 3:5 |
ஏற்கப்பட்டது | 1918 (சூலை 2004 இல் செய்யப்பட்ட மாறுதல்கள்) |
வடிவம் | மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களாலான முப்பட்டைக் கொடி. |
லித்துவேனியாவின் கொடி மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு ஆகிய மூன்று நிறங்களை கிடைமட்டமாகக் கொண்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று லித்துவேனியாவின் சுதந்திர அமைப்பாக மீண்டும் செயல்படுவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னதாகவும், சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவும் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முதன்முதலாக, இருபதாம் நூற்றாண்டில், 1918 முதல் 1940 வரையிலான லித்துவேனியாவின் முதல் சுதந்திர காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் சோவியத் ரஷ்யாவால் சோவியத் ஒன்றியத்திற்குள் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டது. பின்னர் செருமனியன் நாஜிகளால் (1941-44) ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சோவியத் ஆக்கிரமிப்புப் பகுதியாக 1945 ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டு வரை, சோவியத் லித்துவேனியக் கொடி சோவியத் கொடியில் உள்ள சிவப்பு நிறத்தையும் குடியரசின் பெயரையும் கொண்டதாகவும், பின்னர், வெள்ளை மற்றும் பச்சை நிறப்பட்டைகளை அடியில் கொண்ட சிவப்பு நிறத்தையும் கொண்டதாக மாற்றப்பட்டது. இந்தக் கொடியானது 2004 ஆம் ஆண்டில், கடைசியான மாற்றம் செய்யப்பட்டது. இதன் தோற்ற விகிதம் 1:2 லிருந்து 3:5 என்பதற்கு மாற்றப்பட்டது.
வரலாறு
[தொகு]வரலாற்றுரீதியான நாட்டுக்கொடி
[தொகு]லித்துவேனிய அடையாளம் கொண்ட முந்தைய கொடிகள் 15 ஆம் நூற்றாண்டில் ஜான் டிலோகோஸ் பண்டேரியா ப்ருடினோரம் என்ற ஆவணத்தில் எழுதப்பட்டுள்ளது. 1410ஆம் ஆண்டில் கிரன்வால்ட் போரில், இரண்டு தனித்துவமான கொடிகள் இருந்தன. 40 படைப்பிரிவுகளில் பெரும்பாலானவர்கள் பஹோனியா என்று குறிப்பிடப்படும் குதிரையேற்ற வீரனைக் கொண்ட ஒரு சிவப்பு பதாகையை எடுத்துச் சென்றனர். வைடிஸ் என்று அறியப்படும் இந்த கொடி, இறுதியில் லித்துவேனிய போர்க்கொடிகளாக பயன்படுத்தப்பட்டு, 2004 ஆம் ஆண்டில் நாட்டின் கொடியாக மீண்டும் பயன்படுத்தப்பட்டது. எஞ்சியிருந்த படைப்பிரிவுகள், லித்துவேனியாவின் ஆரம்ப கால குறியீடான கெடிமினாசின் துாண்களைக் காண்பிக்கும் ஒரு சிவப்பு பதாகையை வைத்திருந்தன.வைடிஸ் அல்லது பஹோனியா என்றழைக்கப்பட்ட (போகோன் லிதெவஸ்காவிலிருந்து வந்தவர்கள்) லிதுவேனியாவின் கிராண்ட் டச்சியிலிருந்து வந்த போர்ப்படைவீரர்கள் மற்றும் ஜெடிமினாசின் துாண்களைத் துளைத்தவர்கள் (லித்துவேனியாவின் உயர்மட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள்) ஆகியோராவர்.18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, போலந்தின் பிரிவாக இருந்து உருஷ்ய பேரரசினால் இணைக்கப்பட்டது வரை லித்துவேனியா வைடிஸின் கொடியையே பயன்படுத்தி வந்தனர்.[1]
நவீன கொடியின் உருவாக்கம்
[தொகு]ஐரோப்பிய குடியரசுகள் தங்களது கொடிகளை மாற்றுவதற்கான முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதுதான் மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிற மூவர்ணக்கொடி உருவானது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னரான பிரெஞ்சு நாட்டினரின் நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு மூவர்ணக்கொடியே லித்துவேனியாவின் மூவர்ணக்கொடிக்கான உதாரணமாக அமைந்ததெனலாம். லித்துவேனியா மைனரைக் குறிக்கும் பச்சை, வெள்ளை மற்றும் சிவப்பு நிற மூவர்ணக்கொடியே தற்போதுள்ள மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு மூவர்ணக்கொடிக்கு முன்னதாக அமைந்த மூன்று நிறங்கள் எனலாம். [1]முதலில், மஞ்சள், பச்சை மற்றும் சிவப்புகளை பரிந்துரைத்தவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ வாழும் லித்துவேனியர்களால் இந்த யோசனை வழங்கப்பட்டிருக்கக்கூடும் எனப் பொதுவாகக் கூறப்படுகிறது. இந்த மூன்று வண்ணங்கள் நாட்டின் பாரம்பரிய உடைகள் தயாரிக்கும் நெசவில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. [2]
1905 ஆம் ஆண்டில் வில்னியசு மாநாட்டில் லித்துவேனிய நாட்டின் கொடியாக மாற்றப்பட இந்தக் கொடியானது வைடிஸ் பதாகையை விட அதிகமாக விருப்பம் தெரிவிக்கப்பட்டது. ஜோனாஸ் பேசானாவிசியசால் அதிகமாக ஆதரிக்கப்பட்ட வைடிஸ் பின்வரும் மூன்று காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்படவில்லை. முதலாவதாக, தேசிய அடையாளத்திற்கான முனைப்பான நடவடிக்கைகளின் பங்காக இந்த மாநாடு லித்துவேனியாவின் கிராண்ட் டச்சியின் அடையாளத்திலிருந்து மாறுபட வேண்டும்.(ஏனெனில், பெலாரசு மற்றும் உக்ரைன் என இரு தனித்த நாடுகளை உள்ளடக்கியுள்ளது). இரண்டாவதாக, சிவப்பு நிறமானது மார்க்சிசம் அல்லது பொதுவுடைமைத் தத்துவத்தைக் குறிப்பதாக புரட்சியாளர்கள் தாங்களாகவே கருதிக்கொண்டனர். மூன்றாவதாக, வைடிஸ் அடையாளமுள்ள கொடியானது எளிதாக தைக்கப்படவோ, வரையப்படவோ முடியாத அளவுக்குச் சிக்கலானதாக இருப்பது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Seimas of Lithuania - History of the National Flag. Retrieved December 15, 2006
- ↑ Lithuanian folk textile arts
- ↑ Rimša, Edmundas (2005). Heraldry: Past to Present. Vilnius: Versus aureus. pp. 82–87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9955-601-73-6.