ஸ்டீவ் கேரல்
இசுடீவ் கேரல் | |
---|---|
2014 ஆம் ஆண்டில் ஸ்டீவ் கேரல் | |
பிறப்பு | ஆகத்து 16, 1962 கன்கார்ட் மாசாசூட்ஸ் அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
தொழில் | நடிகர், தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், இயக்குநர், எழுத்தாளர் |
துணைவர் | நான்சி வாள்ஸ் (1995 - தற்போது வரை) |
பிள்ளைகள் | எலிசபெத் ஆனி (2001) ஜாண் (2005) |
பெற்றோர் |
|
ஸ்டீவன் ஜான் கேரல் (பிறப்பு: 16 ஆகஸ்ட் 1962) என்பவர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், நகைச்சுவையாளர், திரைப்பட எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் என்.பி.சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி ஆபீஸ் (2005-2011, 2013) என்ற தொடரில் மைக்கேல் இசுகாட்டாக நடித்தார், அதில் அவர் அவ்வப்போது தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
கேரல் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது, தி ஆபீஸ் தொடரில் அவரின் நடிப்பிற்காக வழங்கப்பட்டது.[1] அத்துடன் லைஃப் பத்திரிகையால் "அமெரிக்காவின் வேடிக்கையான மனிதர்" என்று அங்கீகரிக்கப்பட்டார்.[2]
இவர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டில், வெளியான 'பாக்ஸ்கட்சேர்' என்ற திரைப்படம் இவரின் நடிப்புத்திறனுக்கு மீண்டும் ஒரு அங்கீகாரம் கொடுத்தது. அத்துடன் சிறந்த நடிகருக்கான அகாதமி விருது, கோல்டன் குளோப் விருது போன்ற விருதுகளில் பரிந்துரை செய்யப்பட்டது.[3][4] அதை தொடர்ந்து லிட்டில் மிஸ் சன்ஷைன் (2006), தி பிக் ஷார்ட் (2015), கஃபே சொசைட்டி (2016) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஸ்டீவ் கேரல் கோல்டன் குளோப் விருது வென்றார்". Golden globes.
- ↑ "Steve Carell Television Academy". Academy of Television Arts & Sciences. Archived from the original on January 30, 2019. பார்க்கப்பட்ட நாள் November 15, 2014.
- ↑ "The 87th Academy Awards – 2015". Academy of Motion Picture Arts and Sciences. Archived from the original on December 15, 2019. பார்க்கப்பட்ட நாள் July 14, 2017.
- ↑ "Film – Supporting Actor in 2015". BAFTA. Archived from the original on August 6, 2017. பார்க்கப்பட்ட நாள் July 14, 2017.