கடமை
Appearance
கடமை அல்லது பணி
மேற்கோள்கள்
[தொகு]- கடமை உணர்ச்சியே உங்கள் நேர்மையான வாழ்வுக்கு சூத்திரம். - ஃகென்றி ஃபோர்ட்
- செய்யாமல் விட்ட ஒவ்வொரு கடமையும் புதிதாக ஏழு கடமைகளுடன் திரும்ப வரும். - இங்க்ஃசுவே
- கடமை தெளிவாக இருக்கிறபோது தாமதம் செய்வது அறிவீனம் மட்டுமல்ல, ஆபத்தும் கூட ; கடமை தெளிவாக இல்லாதபோது தாமதம் செய்வது விவேகம் மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட. - த்ரையன் எட்வார்ட்ஸ்
- கடமைக்கான அடிப்படைக் கொள்கை சரியாக இல்லாவிட்டால் செயலும் சரியானதாக இருக்க முடியாது. - டி.எட்வர்ட்ஸ்
- கடமையைச் செய்துவிட்டேன்; அதற்காகக் கடவுளைத் துதிக்கிறேன். -செல்ஸன்[1]
- உன் கடமையைச்செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்துகொள்வாய். -கதே[1]
- உனக்கு மிகவும் அருகிலுள்ள கடமையைச் செய். - கதே[2]
- கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை. -அனடோல் பிரான்ஸ்[1]
- சாந்தம், குதூகலம்-இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன. இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன. - ஆர். எல். ஸ்டீவன்ஸன்[1]
- பிறர்க்கு நான் செய்ய வேண்டிய கடமை யாது? அவரை நல்லவராக்குவதா? நான் ஒருவனைத்தான் நல்லவனாக்க வேண்டும். அவன் நானே. பிறர்க்குச் சந்தோஷம் அளிப்பதே அவர்க்கு நான் செய்யக்கூடிய கடமையாகும். - ஆர். எல். ஸ்டீவன்ஸன்[1]
- நல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம். ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம். - ஸதே[1]
- செய்ய இயலாததில் சினங்கொள்வது ஏன்? செய்ய இயன்றதைச் செய்வோமாக. -ரொமெய்ன் ரோலண்டு[1]
- உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது. கொடுத்தவேலையைத் திறம்படச்செய்து முடிப்பதே நமது கடன். -எபிக்டெட்டஸ்[1]
- செய்ய வேண்டியதைச் செய்ய முயல்க; முயன்றால் செய்யவேண்டியது இது என்பதில் சந்தேகம் ஏற்படாது. -ஆவ்பரி[1]
- கெட்ட காலம் வந்தால் எப்படிச் சகிப்பது என்பது குறித்து, நல்ல காலத்தில் சிந்தனை செய்வது மாந்தர் கடன். -டெரன்ஸ்[1]
- இன்று உன்னால் கூடியமட்டும் நன்றாய்ச் செய், நாளை அதனினும் நன்றாய்ச் செய்யும் ஆற்றல் நீ பெறக் கூடும். -நியூட்டன்[1]
- அறமே ஆற்றல் என்று நம்புவோமாக. அந்த நம்பிக்கையுடன் நாம் அறிந்த கடமையை ஆற்றத் துணிவோமாக. -ஆபிரகாம் லிங்கன்
- உன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது? அதைச் செய்ததையே பலனாய் அடைவாய். செயலே பலனாகும். -ஸெனீக்கா[1]
- சுயநலத்திலுள்ள நன்மை யாது? மனிதர் கடமையைக் கடனாகவும், உரிமையை வரவாகவும் ஆக்கிவிட்டனர்; வியாபாரம் என்றும் வியாபாரமே!
கடனின்றி வாழ விரும்பினால் உரிமைகளைத் துறக்க வேண்டும். -பால் ரிச்சர்டு[1] - ஒருபொழுதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்யமாட்டான். -ஆவ்பரி[1]
- ஒன்றும் செய்யாது காத்திருப்பவரும் ஊழியம் செய்பவரே -மீல்டன்[1]
- உனக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் நன்றாக அனுஷ்டிக்க முயல்க. அங்ங்ணம் செய்தால் நீ அறிய விரும்பும் மறைபொருள்களை யெல்லாம் சரியான காலத்தில் தெரிந்து கொள்வாய். -செம்பிராண்ட்[1]
- தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது. -இப்ஸன்[1]
- நான் எப்போதும் என் வரையில் எனது கடமையைச் செய்பவன். மற்றவர்கள் பதிலுக்கு உதவி செய்கிறார்களா என்பதை எதிர்பார்க்காதவன். —இராஜாஜி (5-3.1962)[3]
- தொலைவிலே மங்கலாகத் தெரிவதைக் காண்பது நம் கடமையன்று, நம் கண் முன்பு உள்ளதைச் செய்வதே நம் மேலான கடமை. - கார்லைல்[2]
- நமது வாழ்க்கை பெருங்கடமைகளுக்காக அளிக்கப் பெற்றுள்ளது. சுயநலத்திற்காக அன்று: குறிக்கோளில்லாத கனவுகளில் வீணாகக் கழிப்பதற்காக அன்று; நம்மை அபிவிருத்தி செய்துகொண்டு, மனித சமூகத்திற்குத் தொண்டு செய்வதற்காக. - ஆப்ரே டி. வீர்[2]
- மனிதனின் கடமை தெளிவானது. சுருக்கமானது. அதில் இரண்டு விஷயங்களே உள்ளன. கடவுளுக்காக அவன் செய்ய வேண்டிய கடமை. இதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் அண்டை வீட்டுக்காரருக்கு அவன் செய்ய, வேண்டிய கடமை, தனக்கு மற்றவர் செய்ய வேண்டுமென்று விரும்புவதை அவனே செய்ய வேண்டும். -தாமஸ் பெயின் [2]
- நம் கடமையைச் செய்வதில் நாம் அதைச் செய்வதைக் கற்றுக் கொள்கிறோம். - இ. பி. புஸே[2]
- செய்யாமல் விட்டுள்ள ஒவ்வொரு கடமையும் புதிதாக ஏழு கடமைகளுடன் திரும்ப வரும். - சார்ல்ஸ் இங்ஸ்லே[2]
- கடமைகள் நம்முடையவை. நிகழ்ச்சிகள் கடவுளுடையவை. - ஸெஸில்[2]
வெளியிணைப்புக்கள்
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 144-145. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.