வழிபாடு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வழிபாடு, பெயர்ச்சொல்.
- வழியிற்செல்லுகை
- பின்பற்றுகை
- வணக்கம்
- (எ. கா.) பூசித்துப் பணியும் வழிபாடு பாரீர் (ஏகாம். உலா. 371).
- பூசனை (பிங். )
- (எ. கா.) இத்தளி வழிபாடு செய்வார்க்கு ((S. I. I.) i, 150).
- வழக்கம் (W.)
- சமயக்கோட்பாடு (W.)
- இறை வணக்கம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- proceeding on the way
- following
- reverence, adoration
- ritual, worship
- use, custom, habit
- religious system
- prayer
- worship
விளக்கம்
[தொகு]- இறைவன் உள்ளான் என்றும், வாழ்க்கைக்கான ஒழுக்கங்களையும், அறநெறிகளையும் போதிக்கும் எந்தவொரு சமயத்தினைச் சேர்ந்தவர்களும், அவரவர்கள் விருப்பப்பட்ட தெய்வங்களைக் கோவில்/பள்ளிவாசல்/மாதாக்கோயில்/தேவாலயம்/குருத்வாரா போன்ற பொதுவிடங்களிலோ அல்லது வீடுகளிலோ, ஏற்படுத்தப்பட்ட/பழக்கப்பட்ட நியம நியதிகளைப் பின்பற்றி பூசிக்கும்/ஆராதிக்கும்/வேண்டும் முறையே வழிபாடு ஆகும்...
- வழிபாடு என்பது மதம், குலம், நாடு, இடம், குடும்ப பழக்க வழக்கங்கள் முதலானவற்றின் அடிப்படையில் பலவேறு வழிமுறைகளில் பின்பற்றப்படுகிறது...
- வழிபாடுகள் சமயாசந்தர்ப்பங்களுக்கு அனுசரணையாக அதாவது பண்டிகை, திருநாள், உற்சவம், வீட்டு விசேடங்கள், தனிப்பட்ட பிரார்த்தனைகள்/வேண்டுதல்கள் ஆகிய நிகழ்வுகளுக்கேற்பவும் மாறுபடும்...
வாக்கியப் பயன்பாடு
[தொகு]- பெரும்பான்மை மக்கள் மன அமைதிக்காகவும், வாழ்க்கையில் கோரியதை அடைந்து இன்புற்றிருக்கவும், முற்பிறவிகளில் செய்த பாவங்கள் தொலைந்து நற்கதியை அடையவும் தெய்வ வழிபாடு அவசியம் எனக் கருதுகிறார்கள்.
:(invocation)-(ஆராதனை)-(தொழுகை)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- அறுபட்ட கோப்புத் தொடுப்புகளுள்ள பக்கங்கள்
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- ஏகாம். உலா. உள்ள பக்கங்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- S. I. I. உள்ள சொற்கள்
- (W.) உள்ள சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- நான்கெழுத்துச் சொற்கள்
- இறையியல்
- வேற்றெழுத்து வேறுபாடுகள்