நம்ம ஆளுங்களுக்கு ஒரு ஐடியா கிடைச்சா அதை அவங்க படத்தில் ஒரு இன்ட்ரஸ்டிங்கான சீனா வெப்பாங்க. ஆனா இவங்க அந்த சின்ன ஐடியாவையே ஒரு கதையா பண்ணிடுவாங்க. சுலபமா நம்மளை அவங்க கதைக்குள்ளவும் இழுத்திட்டு போய்டுவாங்க.
லாங் லேக்ஸ் டைரக்டரோட படம் அதால நிறைய திர்லிங் மொமண்ட்ஸ் இருக்கும்னு நம்பினது இயல்புதான. படம் ஆரமிச்சதும் கொண்டு போன விதமும் செம்மையா இருந்தது. ஏன்னா அவங்களுக்கு கிடைச்ச ஐடியா அப்படி.
அதை நல்லாவே எக்ஸிக்யூட் பண்ணிருந்தாங்க. ஆனா போக போக கதையை விட்டு நம்மளையும் வெளியே தள்ளிவிட்டுட்டு இவங்களும் எங்கயோ போய்ட்டாங்க. 💜💚❤